தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03112-2.1 களவு வெளிப்பாட்டுக் கிளவிகள்

2.1 களவு வெளிப்பாட்டுக் கிளவிகள்

களவு ஒழுக்கம் வெளிப்படாத போது, வரைவு மலிதல், அறத்தொடு
நிற்றல்
முதலான செயல்பாடுகள் நிகழும். அவற்றின் வழி, கற்பு
வாழ்வு மலரும். அதற்கு மாறாகத் தலைமக்களின் களவு வாழ்க்கை
வெளிப்படும் வண்ணம் அதுபற்றியே பலரும் அலர்தூற்றிப் பேசும்
நிலையில் நிகழும் கிளவிகளை, களவு வெளிப்பாட்டுக் கிளவிகள்
என்பர். அவற்றை, உடன்போக்கு - கற்பொடு புணர்ந்த கவ்வை
- மீட்சி
என்னும் மூன்று வகையான நிகழ்ச்சிகளாக வரிசைப்படுத்தி
வழங்குவார் நாற்கவிராச நம்பி. அவை ஒவ்வொன்றும் உட்
பிரிவுகளாகச் சில வகைகளையும் அவற்றுக்கெனச் சில கிளவிகளையும்
உடையன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:14:11(இந்திய நேரம்)