Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
செவிலி பின்தேடிச் செல்லுதலின் விரிவுக் கிளவிகள் யாவை?
தலைவி
தனது நட்பு வட்டமும் நற்றாயும்
வருந்துமாறு
உடன் போக்காகச் சென்ற
பாதையிலேயே பின்
தொடர்ந்து செவிலி
தேடிச் செல்லுதல் ஒன்பது வகையான
விரிவுகளை உடையது.
அவையாவன :
(1) தலைவியின் பிரிவைத் தாங்காத நற்றாயைத் தேற்றுதல்.
(2)
செல்லும் வழியில் மூன்று தண்டுகளைக் கையில் கொண்ட
அந்தணரை (முக்கோல் பகவர்)
வினவுதல்.
(3)
அந்தணர் செவிலியிடம் ‘உடன்போக்கு
உலக இயல்புதான்’
என்று காரணம் கூறி விளக்குதல்.
(4)
செவிலி, பாலை நிலத்தில் செல்லும்
போது
இடைவெளியில்
சந்தித்த ஒரு பெண்ணிடம் புலம்பிக் கூறுதல்.
(5)
செவிலி இடைவழியில்
கண்ட குரா என்னும்
மரத்துடன்
புலம்பிப் பேசுதல்.
(6)
தான் செல்லும் வழியில்
பாதச் சுவடுகளைக்
கண்டு அவை
தலைவியின் பாதச் சுவடுகளாகுமோ என்று
வருந்திப் பேசுதல்.
(7) செவிலி
போகும் வழியில் எதிர்ப்படும்
தலைமக்களைப்
பார்த்துத் தன் மகள் சென்ற
விவரம் கேட்டல்.
(8)
எதிரில்
வந்தோர் செவிலியின் புலம்புதலைக்
கேட்டு
அவளுக்கு ஆறுதலான சில
வார்த்தைகளைக் கூறுதல்.
(9)
செவிலி, நெடுந்தூரம்
நடந்தும் தன் புதல்வியைக்
காணாமையால் துன்பம் மிகுந்து வருந்திக் கூறுதல்.