Primary tabs
பொருள் வகை என்பதை விவரிக்க.
இது
அகப்பாட்டு
உறுப்புகளில்
பதினொன்றாவதாக இடம் பெறுவது, ‘பொருள் வகை’
என்பதைப் பாடலில் பொருள் உணர்ந்து கொள்ளும்
முறை என்று அமைத்துக் கொள்ளலாம். இதனைப்
பொருள்கோள் என்றும் வழங்குவர்.
ஒரு பாடலில் அமைந்த
சொற்கள் எவற்றையும்
மாற்றாமல் உள்ளது உள்ளவாறே வைத்துப் பொருள்
கொள்ளமுடியும். அவ்வாறன்றி,
சில சொற்களை
முன்பின்னாக மாற்றி அமைத்தும் பொருள் கொள்வர்.
அப்போதே பாடலின் பொருள்
முறையாகவும்
முழுமையாகவும் அமையும்.