Primary tabs
6.0 பாட முன்னுரை
நாற்கவிராச நம்பி இயற்றிய
அகப்பொருள் விளக்கம் என்னும் நூல்
252
நூற்பாக்களைக் கொண்டது. அவற்றை இரண்டு
இலக்கணத்
தாள்களாகப் (பாடங்களாகப்) பிரித்து நாம் கற்றுணர்ந்து
வருகிறோம்.
இலக்கணம் - 3 (D021)
என்னும் தாளில் ஆறு பாடங்களிலும்,
இலக்கணம் - 4 (d031)
என்னும் தாளில் முதல் ஐந்து பாடங்களிலும்
கற்றுணர்ந்த
செய்திகளின் மேம்பட்ட விளக்கப்பகுதியாக
d03116
என்னும் இப்பாடம் அமைகிறது.
முந்தைய பாடங்களில் கற்றுணர்ந்த
இலக்கணச் செய்திகள் வழியாக
நாம் உய்த்துணரும் அகப்பொருள்
இலக்கணச் சிறப்புப் பண்புகளைத்
தொகுத்தும்
வகுத்தும் மீள்பார்வை செய்தல், நம்பியகப் பொருள்
இலக்கணப் பாடப் பயிற்சிக்குத் துணை புரியும் வகையில்
வரையறைகள்,
வகைப்பாடுகள் கண்டறிதல் என்பன
இப்பாடத்தின் செய்திப்
பகுப்புகளாக அமைகின்றன.