தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  •     

    4.5 தொகுப்புரை

         சிலப்பதிகாரத்தை உ.வே. சாமிநாதயர் வெளியிட்ட பின்பு இசைத் தமிழ் ஆய்வு தொடங்கப்பட்டது. தமிழிசை வளம், சிறப்பு, நுட்பம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை ராவ் பகதூர் மு.ஆபிரகாம் பண்டிதர் இவ்வகை ஆய்வை முதலில் மேற்கொண்டார். இசைத் தமிழ் ஆய்வின் தலைமகன் எனப் போற்றப்படுகிறார். இசைத் தமிழ் ஆய்வு மாநாடுகள் நடத்தி அவைகளையெல்லாம் தொகுத்தும் ஆய்ந்தும் கருணாமிர்த சாகரம் என்ற நூலையும், இசைப் பயிற்சிக்குரிய பாடநூல்கள் தமிழில் இல்லாத குறையை நீக்கக் கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். மதுரை நாதசுர விற்பன்னர் பொன்னுசாமி .சிலப்பதிகாரத்தின் வாயிலாகத் தெரிந்த செய்திகளை அறிந்த இவர் தமிழிசையில் தாய் இராகங்கள் 22 அல்ல 24 என்பதனை வெளியிட்டார்.    தமிழர் கண்டுணர்ந்த தனிப்பெரும்    இசைக்கருவியான யாழ், கருவியாக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டின் சின்னமாகவும், தமிழிசை வளம் உரைக்கும் கருவியாகவும் விளங்குவதனை,சிலம்பின் காதையில் யாழ் நூலாசிரியர் அமைதியிற் கூறிய செய்திகள் அடிப்படையில் விபுலானந்த அடிகளார் யாழ் நூல் வெளியிட்டார்.

        இசைத் தமிழ் வளத்தைத் தமிழகமெங்கும் பரப்பிய குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி , பேராசிரியர் க.வெள்ளை வாரணனார், பேராசிரியர் தனபாண்டியன், பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் ஆகியோர் சிறந்த ஆய்வு நூற்களையும், வரலாற்று நூற்களையும், தமிழிசைக் கலைக் களஞ்சியங்களையும் வெளியிட்டு இசைத் தமிழ் ஆய்வை வளப்படுத்தினர். இவர்களின் ஆய்வுப் போக்கால் இசைத்தமிழ் ஆய்வு இன்று பெருகி வளர்வதோடு எங்கும் தமிழிசை என்ற நிலைமை மேம்பட்டு வருகிறது. தமிழிசை ஆய்வால் தமிழிசை வளத்தை உலகறியும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.
     

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளாரின் இயற்பெயர் என்ன?
    2.
    யாழ் நூல் தோன்ற மூலமாக அமைந்த நூல் எது? பகுதி எது?
    3.
    யாழ் நூலமைப்பைப் பற்றி உரைக்க.
    4.
    யாழ் நூல் உரைக்கும் முக்கியக் கருத்து யாது?
    5.
    குடந்தை ப.சுந்தரேசனார் படைத்த நூல்களைக் குறிப்பிடுக .
    6.
    கு.கோதண்டபாணியார் எழுதிய பழந்தமிழிசை என்ற நூலின் கருத்து என்ன?
    7.
    இசைத்தமிழ் என்ற ஆய்வு நூலைத் தந்தவர் யார்?
    8.
    பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் பற்றி எழுதுக.
    9.
    வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் ஆய்வின் தனிச் சிறப்பு என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:52:42(இந்திய நேரம்)