தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.6 தொகுப்புரை

    கலையும் இலக்கியமும் அந்தந்தக் காலத்திற்கு ஏற்பத் தம் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் மாற்றிக் கொள்ளும். அப்படித் தம்மை மாற்றிக் கொள்ளும் கலைகள் தாம் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழும். அந்த வகையில் தமிழகத்தில் இருந்துவந்த மரபுக் கலைகள் தங்களது உருவங்களைச் சற்றே மாற்றிக் கொண்டுள்ளன. தற்கால ஓவியக் கலையின் மீது மேற்கத்தியத் தாக்கம் அதிம் உள்ளது. எனவே மரபு ஓவியக் கலை முற்றிலும் மாற்றம் பெற்றுப் பொதுமக்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாத     கலையாக வளர்ந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து சற்றுத் தூரம் தள்ளியே நிற்கிறது நவீன ஓவியம். எனினும் அவர்கள் புரிந்து கொள்ளுமாறு அவர்களின் அறிவு, அனுபவத் திறன்களை வளர்ப்பதன் மூலம் கலைகளின் அடுத்த வளர்ச்சிக்குக் கலைத்திறனாய்வாளர்கள் முயல வேண்டும்.

    \

    1.
    சென்னைக் கலைக் கல்லூரி தந்த ஓவியர்கள் யாவர்?
    2.
    வீர. சந்தானத்தின் ஓவியப் படைப்புகளில் முக்கிய இடம் பெறுவது யாது?
    3.
    ஒட்டோவியம் பற்றி எழுதுக.
    4.
    ஒட்டோவிய ஓவியர் இருவரைக் குறிப்பிடுக.
    5.
    எருது என்னும் கோட்டோவியம் படைத்தவர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:23:36(இந்திய நேரம்)