தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiam - Ezhuthathikaram


பிறர்  கூறுங்  கூற்றை யாம் மறுத்துரைத்தமையானு மினி துணரலாமாதலின்
அது பொருந்தாதென்பது.
 

இனி,  வடமொழியில் வரும் ஏ, ஓ, ஐ, ஒள என்னும் எழுத்துக்களையும் சந்தியக்கரமென்று   கூறுவதினும்,   அவை   போல  அகரவிகர  முதலிய எழுத்துக்கள்    சேர்ந்து    ஒலிக்கு    மென்பதே   பொருத்தம்போலும். எங்ஙனமெனின்  :-  சந்தியிலே  (புணர்ச்சியிலே)   பதத்தினிறுதியில்வரும் அகரத்திற்கும்,     பதமுதலில்வரு     மிகரத்திற்கும்     அவ்விரண்டன் பிறப்பிடத்தையும்  தனக்குப்  பிறப்பிடமாகக்கொண்ட  ஏ என்னு மெழுத்து ஆதேசமாக     வருதலின்,     அவ்விரண்டனொலியும்    அமைந்தமை பெறப்படுமாதலின்,   ஏனையவு   மிவ்வாறே   யமைந்தமை   வடமொழிச் சந்தியிலக்கணம்  நோக்கியுணர்க.  அன்றி, இரண்டெழுத்துக் கூடியவெனில், அவற்றைத்  தனி  எழுத்தாக  வைத்து  மகேசுரர்  சூத்திரஞ்   செய்யார். அவ்வாறே    தமிழிலக்கண     நூலாசிரியர்களாகிய     தொல்காப்பியர் முதலியோரும்  ஐ  ஒள  என்பவைகள்  சந்தி  எழுத்தாயின்  அவற்றைத் தனியெழுத்தாக  வைத்துச்  சூத்திரஞ்  செய்யார்.   ஆதலின்,   ஐ   ஒள என்பவைபோல அ இ,  அய்;  அஉ,  அவ்  என்பவை  ஒலிக்குமென்பதே அவ்வாசிரியர்கள் கருத்தென்பது துணிவாதல் காண்க.  
 

 

["செந்தமிழ்" தொகுதி - 22, பகுதி - 3]


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 20:17:34(இந்திய நேரம்)