தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xviii

சொல் எச்சம் என்பது ‘சொல்’ என்னும் சொல்லே எஞ்சி வருவதாம், என்றான் என்பதி்ல் என்று ‘சொன்னான்’ எனப் பொருள் கொள்ளும் போது ‘சொல்’ என்பது எஞ்சி நின்றது காண்க.

(குறிப்பு: இசையெச்சம் சொல்லெச்சம் பற்றிய கருத்து வேறுபாடுகளை உரைகளிற் கண்டு தெளிக)

பத்துவகை எச்சங்களுள் வினை யெச்சமும் பெயர் எச்சமும் வினையியல் ஒழிபுகள். பிரிநிலை ஒழியிசை, எதிர்மறை, உம்மை, என என்பன இடையியல் ஒழிபுகள். சொல் குறிப்பு இசை என்பன பிற ஒழிபுகள்.

6. இடையியல் ஒழிபுகள் :

சொற்கள் பிறிதோர் சொல்லை வேறுபடுத்துதல் (விசேடித்தல்), வேறு படுத்தப்படுதல் (விசேடிக்கப்படுதல்) என இருவகையில் வரும். ஆனால் இடைச் சொல் என்பது பிறிதோர் சொல்லை வேறுபடுத்தவே வரும் வேற்றுமை யுருபுகள் தாம் சாரும் பெயர்ப் பொருளை வேறுபடுத்துவதைக் காண்க. (59)

உரிச்சொற்களில் சில வேறு படுத்தவும் வேறுபடுக்கப்படவும் வரும். உறு என்பது உறுபொருள் (மிக்க பொருள்) என வேறுபடுத்தவே வரும். குரு (நிறம்) என்பது குருமணி (நிறமுடையமணி) என வேறுபடுத்தவும் ‘விளங்குகுரு’ (விளங்கும் நிறம்) என வேறுபடுக்கப்படவும் வரும். (60) (இக்கருத்து உரியியல் ஒழிபாயினும் சூத்திரம் சுருங்க வேண்டிமேலதனுடன் சாரவைத்தார். தொல்காப்பியர்)

7. பிற ஒழிபுகள்

ஓர் எருத்தை நம்பி என்பதும் பசுவை இலக்குமி என்பதும் போல ஒரு திணைப் பெயரை ஒருதிணைப் பெயராக வழங்கும் சொற்களும், பூனையைக் குறிக்கும் பூசை என்பது திசைப் பெயர்; ;அதனால் வரும் பூசையான் என்பதுபோலும் சொற்களும், ‘யாற்றுட் செத்த எருமை யீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்’ என்பது போலத் தொடர்பில்லாத ஆனால் வழங்கி வருதல் எள்ள சொற்களும், பொருள் கருதி ஒரு திணையை வேறொரு திணைப் பொருளாகத் திரித்து வழங்கும் சொற்களும் (இதனைப் பிசி என்பர்.) இது பெரும் பாலும் சிலேடையில்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 17:43:00(இந்திய நேரம்)