Primary tabs
xv
என்று புத்துரை கூறிப்,
“படையொடு பிறர்மேற் செல்லுதற்கு மண்ணசையே நோக்கமாயின் அது உயரொழுக்கமாகாமல், ‘துன்பம் தவாஅது மேன்மேல் வரும்’ இழுக்கமாகும். இனி, மண் வேட்கையால் தன்மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளாவிருப்பது ஆண்மையற-மழிப்பதாகும்.அதனால் தன்னாட்டின்மேல் தணியாத வேட்கையுடைய அறமற்ற அயல்மன்னன் வலிபெருக்கித் தன்மேல் வருமுன்னமே தக்கபடையொடு தான்சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும்.அது செய்யானை, எஞ்சா மண்ணசையுடையான் வஞ்சத்தால் வலிமிக வளர்த்து வாய்த்தபோது வந்து தடிவனாகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடையானை வென்றடக்கி ஆண்மையறமாற்றுதல் போற்றத்தகும் ஒழுக்கமாகும்.அவ்வொழுக்கமே பழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை!”
என அரிய விளக்கமும் அளிப்பர்.
“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப”
(மெய்ப். 1)
என்பது மெய்ப்பாட்டியலில் வரும் முதல் நூற்பா.இதற்குப் ‘பேராசிரியரா’கிய முன்னைய உரையாசிரியர், “நாடகமகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்பவிளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும், அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி யடங்கும் நாடக நூலாசிரியருக்கு!” என்பர்.
இதற்கு நாவலர் பாரதியார் விரிவான மறுப்புரை தருவர்.
“தொல்காப்பியர் இங்கு விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பன்றிக் கூத்துறுப்பொன்றுமன்று!. . . . . அகப்புறப் பொருட்டுறை யனைத்திற்கு முரிய இயற்றமிழ்ச் சான்றோர் செய்யுளுறுப்பாவன மெய்ப்பா டென்பதை மறந்து, அவை நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும். . . . .என மயங்கக் கூறினர். . . . .அன்றியும் இவையெல்லாம் ஆரியக் கூத்து நூலார்