தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


ix
நிறுவனத் தலைவர் ஆணையைச் செயல்படுத்துமுகத்தான் மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை அவர்களின் யாப்பருங்கலம் என்ற நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுகிறது.
மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை அவர்களுடைய திருத்தம் பெறாமல், யாப்பருங்கலம் 1960 - இல் வெளிவந்தது என்பது முன்னரே குறிக்கப்பட்டது. 1972 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வாயிலாகப் புலவர்மாமணி இரா.இளங்குமரன் அவர்கள் யாப்பருங்கலத்தைச் செம்மையாகப் பதிப்பித்தார். புலவர் இரா. இளங்குமரன் அவர்களால், மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை பதிப்பித்த ‘யாப்பருங்கலம்’ எனும் இந்நூலும் செப்பம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
புலவர் இளங்குமரன் அவர்கள் இப்பதிப்பினைச் சிறப்புச் செய்யும் வகையில் ஆய்வுரையும் எழுதியுள்ளார்.
அரிய நூல்கள் வெளியிடும் திட்டத்தின்கீழ் இந்நூல் வெளிவர நிதி நல்கிய தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ச. நாகராசன் அவர்களுக்கு எங்கள் நன்றி.
இந்நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டிவருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத் துறைச் செயலாளர் திருமிகு. த. இரா. சீனிவாசன் இ.ஆ.ப., அவர்களுக்கும் எங்கள் நன்றி.
இந்நூலின் மெய்ப்புத்திருத்திய நீலகண்டபிள்ளை அவர்களுக்கும், இப்பதிப்பில் அகராதிகளின் பக்க எண்களைத் திருத்தி அமைத்த நிறுவனச் சுவடிப்புல ஆராய்ச்சி உதவியாளர்களான திரு. மொ. மருதமுத்து, திரு. மூ. பரிமணன் ஆகியோருக்கும். இந்நூலினை வனப்புற அச்சிட்டுத்தந்த பார்க்கர் கம்பியூட்டர் & பப்ளிகேஷன் வே. கருணாநிதி அவர்களுக்கும் நன்றி.

 10.9.98                                                

இயக்குநர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 16:37:29(இந்திய நேரம்)