தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


xvi

இவர் தென்னிந்தியாவிற் பற்பல இடங்களில் ஏற்பட்ட குழப்பங்களைத் திறம்பட அடக்கி, ஐரோப்பிய மேற்பார்வை உத்தியோகஸ்தர்களால் ‘அற்புதம் விளைத்த விற்பன்னர்’ எனப் புகழ்ந்து உரைக்கப்பட்டார்; கொலை, கொள்ளை, பொய்க் கையெழுத்து, மோசம் முதலிய சிக்கலான வழக்குகளைக் கண்டுபிடித்து, தமது நுண்ணறிவால், அவற்றின் உண்மையை நாடி அறிந்து வெளிப்படுத்தியதால், தம் மேலதிகாரிகளாலும் நீதிபதிகளாலும் மிகவும் பாராட்டப்பட்டனர். மனந்தடுமாறாமை, நேர்பட ஒழுகல், நிருவாக சாதுரியம் ஆகிய அரும்பண்புகள் இவரிடம் விளங்கின. இவர் சட்டப் பரீட்சையில் தேறாதவராயினும், தமக்கு இயற்கையிலேயே சட்ட நூல்களை ஆராய்வதில் ஏற்பட்டிருந்த பெருவிருப்பத்தால், அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்த சட்ட அறிஞராவர்.

இவர் எப்.எல்., பி.எல்., சட்டப் பரீட்சைகளுக்குரிய 30 நூல்களை ஆராய்ந்தெழுதிப் பதிப்பித்துள்ளார்.

1904-ஆம் ஆண்டு முதல் 1912-ஆம் ஆண்டு வரையில் இவர் சென்னை நகரக் குற்ற வர்த்தமான விசாரணை வகுப்புத் தலைவராய் அமைந்து, அரசாங்கத்திற்கு அரிய சேவை செய்தனர்.

மாட்சிமை தங்கிய வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும் சென்னைக்கு விஜயம் செய்தபோது (1906 ஜனவரி 24-28) அவர்களுக்கு மெய்காப்பாளராயிருக்கும் பொறுப்பை ஏற்று இவர் திறம்படச் செயலாற்றியதற்கு வியந்து, இளவரசர் தம் திருக்கரத்தாலேயே விசேட விருதுப் பதக்கம்1 ஒன்றை இவருக்கு அணிந்து மகிழ்ந்தார். மிண்டோ பிரபுவும் ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போதும் இவரே அவர்களுக்கு மெய்காப்பாளராயிருந்து அவர்கள் மெச்சும்படி செயலாற்றினார்.

1918-இல் இவர் சென்னைத் தென் பாரிச நகரக் காவற் படை அதிகாரத் தலைமைப் பிரதிநிதியாய் இருந்தபோது, இவர் ஆற்றிய செயல்கள் துரைத்தனத்தாரால் மிகப் பாராட்டப்பட்டன.

இங்ஙனம் முப்பத்தைந்தாண்டுகள் இவர் ஆற்றிய உத்தமத் தொண்டுகளைத் துரைத்தனத்தார் தொடர்ச்சியாக


 1 Special medal.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 17:14:09(இந்திய நேரம்)