தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


xviii

இராமானுசக் கவிராயர், சங்கர நமச்சிவாயப் புலவர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின் உரைகளைத் தழுவி எழுதப்பட்ட நன்னூல் காண்டிகை யுரை முதலியவற்றை இவர் தம் பொருளைக் கொண்டு வெளியிட்டிருக்கின்றனர். இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களும் பல. இவர் இயற்றிய நாடகங்கள் இலண்டன்மா நகரத்தில் மாட்சிமை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி யாரும் மேரி மகாராணியாரும் கண்டு களிக்க அவர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டப் பட்டமை இங்குக் குறிப்பிடத் தக்கது. இவர் சென்னைப் பல்கலைக் கழகத் திராவிட வாசக சங்கத்திற்குத் தலைவராயும் - பல்கலைக்கழக அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட திராவிடச் சொற்றொடராக்கச் சங்கத்தின் அங்கத்தினராயு மிருந்திருக்கிறார். தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் சபா நாயகருக்குப் பிரதிநிதியாய் 1இருந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்களிற் பல பல்கலைக் கழகச் சார்பில் நடைபெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கும் உயர்தரப் பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கும் பாட புத்தகங்களாக அமைக்கப் பட்டன. இவர் இயற்றிய வாசக பாடங்கள் இளஞ்சிறார்க்குப் பயன்பட்டு வருகின்றன.

இவர் தலைவராயும் அங்கத்தினராயும் அமர்ந்து தொண்டாற்றிய கலைக் கழகங்களும் சபைகளும் பலவாகும். அக்கழகங்களும் சபைகளும் இவரைப் பெரிதும் பாராட்டி யுள்ளன. அவற்றைப்பற்றிய குறிப்புகள் யாவும் இவரது வாழ்க்கை, வரலாற்றைக் கூறும் விரிவான நூலில் வெளி வருமாதலின், விரிவஞ்சி இங்கு விடப்பட்டன.

இவர் அரசாங்கத்தாரால் பெற்ற பட்டங்களும் பரிசுகளும் மதிப்புரைகளும் பல. 1889-ஆம் ஆண்டு உத்தியோகத்திற் சேர்ந்த இவர், படிப்படியாய் உயர்ந்து, 1908-ஆம் ஆண்டு போலீஸ் அஸிஸ்டெண்டு கமிஷனர் பதவியை ஏற்றனர்; 1918-ஆம் ஆண்டு டெபுடி கமிஷனர் பதவியை மேற்கொண்டனர்.

இவர் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியாருக்கும், அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகளுக்காக ஆண்டுதோறும் ஆயுள் வரையில் இவருக்கு


 1 Vice - President


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 17:21:38(இந்திய நேரம்)