தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


xxxi

அருங்கலம் காரிகை இவற்றின் உரைகளுள் அருங்கல விருத்தியே முற்பட்டதாம். அருங்கலம் முதற்கண் செய்யப் பெற்றது போலவே அதன் உரையும் முதற்கண் எழுந்தது என்பதற்குத் தக்க சான்றுகள் உள.

அருங்கலத்தில் காரிகைச் செய்யுள்கள் காட்டப்பெற்று ‘யாப்பருங்கலப் புறநடை’ என்றோ ‘காரிகை’ என்றோ குறிக்கப் பெற்றுள்ளனவே அன்றிக் காரிகை உரை குறிக்கப் பெற்றில. ஆனால் காரிகை உரையில்,

‘மற்றும்’ என்றதனால் பதின்சீரின் மிக்க அடியான் வரப் பெறுவனவும் (ஆசிரிய விருத்தம்) உளவெனக் கொள்க. அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க’’ (13) என்றும், ‘‘இவற்றிற்கு (ஓசைகள்) இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க’’ (21) என்றும், ‘‘ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பா யாப்பருங்கல விருத்தியுள்ளும் தேசிகமாலை முதலியவற்றுள்ளும் கண்டு கொள்க’’ (24) என்றும், ‘‘ஐந்தடியானும் ஆறடியானும் வருவன (வேற்றொலி வெண்டுறை) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (27) என்றும், பதின்சீரின் மிக்கு வருவன வெல்லாம் (விருத்தம்) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க’’ (29) என்றும், வெள்ளைச் சுரிதகத்தால் இற்றன (கலி) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (30) என்றும், எட்டும் பதினாறுமாய் வருவன (அம்போதரங்கம்) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (30) என்றும் ‘‘பிறவும் (வெண்கலிப்பா) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க.’’ (31) என்றும், ஆசிரியத்தினோடும் வெண்பாவினோடும் மயங்கி வந்த மயங்கிசைக் கொச்சக் கலிப்பா ‘காமர் கடும்புனல் கலந்தெம் மோடாடுவாள்’ (கலி. 39) என்னும் பழம் பாட்டினுள் மயங்கி வந்தவாறு யாப்பருங்கலவிருத்தியுட் (86) கண்டு கொள்க’’ என்றும், இவற்றுக்கு (கொச்சகம்) இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (32) என்றும், இரணத் தொடைக்கும் என்ற உம்மையான ஒழிந்த மோனை எதுகை இயைபு அளபெடை என்னும் நான்கு தொடைக்கும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. அவையெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (40) என்றும்,‘‘இவ்வண்ணவிகற்பம்எல்லாம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 19:02:16(இந்திய நேரம்)