" ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப". "
(தமிழ்நெறிவிளக்கம்,மேற்)
" ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை முச்சீர் கோயி னாற்சீர் துணிவே ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் தழா அல் எழுசீர் தானெடுந் தூக்கென மொழிப. "
" ஆயிரு திணையு மரசர்க் குரிய. "
" குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை நடுச்சொல்லு நல்லணி யாக்கம்-கெடுக்கும் அழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டும் இழுக்கா வவையின்க ணெட்டு. "
" விட்டில் கிளிநால்வாய் வேற்றரசு தன்னரசு நட்டம் பெரும்பெயல்காற் றெட்டு. "
" நாடிய நட்புப் பகைசெலவு நல்லிருக்கை கூடி னரைப்பிரித்தல் கூட்டலா-றீடிலா வேட்டங் கடுஞ்சொன் மிகுதண்டஞ் சூதுபொருள் ஈட்டங்கட் காமமிவை யேழு. "
" உருவி யாகிய வொருபெருங் கிழவனை அருவி கூறுத லானந் தம்மே. "
" நெல்வரகு சாமை தினையிறுங்கு கேழ்வரகு கொள் ளுழுந்தோ டெண்விளைவா கும். "
Tags :