தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

முகவுரை

ix

 
 

ஒரு நூலைப் பதிப்பிக்குங்காலத்தில் உளவாகும் காலப்போக்கு பொருட்செலவு உழைப்பு முதலியவற்றைக்காட்டிலும் அதனைத் தேடுதலிலும் பரிசோதித்தல் முதலியவற்றிலும் உளவாகும் காலப்போக்கு முதலியன எத்தனையோ மடங்கு அதிகமென்பது சொல்லாமலே விளங்கும்.

பழைய தமிழ் நூல்களின் பரிசோதனைக்கு உடனிருந்து உதவி செய்வோர்கள் விஷயத்தில் எனக்குச் சிறிதும் பொருட் கவலை யுண்டாகாதபடி ஸ்ரீஸேது ஸமஸ்தானாதிபதிகளும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்களும் சென்னைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினர்களுமான கௌரவம் பொருந்திய ம-ள-ள-ஸ்ரீ பா. இராஜராஜேசுவர ஸேதுபதி மஹாராஜா அவர்கள் கைம்மாறு கருதாமற் சில வருடங்களாகப் பேரன்புடன் பொருளுதவிசெய்து ஆதரிக்கின்றார்கள்.இவர்களுடைய பெருந்தகைமையும் வண்மையும் வித்தியாபிமானமும் மிகவும் மதிக்கற்பாலன.

இவ்வுரைப் பரிசோதனைக்குக் கருவியாக இருந்த பிரதிகள் 15;முற்றுமுள்ளவை 6; அபூர்த்தியானவை 9. அவை வருமாறு:-


திருவாவடுதுறை யாதீனத்துப் புத்தகசாலைப்
...

பிரதி

3
சென்னை அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைப்
...
...
1
மதுரைத் தமிழ்ச் சங்கத்துப்
...
...
3
மிதிலைப்பட்டி ஸ்ரீ அழகியசிற்றம்பலக் கவிராயரவர்கள்
...
...
1
ஆழ்வார்திருநகரி ஸ்ரீ தே. லக்ஷ்மண கவிராயரவர்கள்
...
...
1
திருநெல்வேலி ம-ள-ள-ஸ்ரீ கவிராஜ ஈசுவரமூர்த்தியா
பிள்ளையவர்கள்
...
...
1
’’ இந்து காலேஜ் தமிழ்ப் பண்டிதர்
...
...
1
ம-ள-ள-ஸ்ரீ சொர்ணம் பிள்ளையவர்கள்
...
...
1
சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னம்பலம் பிள்ளையவர்கள்
...
...
1
சென்னைச் சைவ வித்தியானுபாலனயந்திரசாலைத் தலைவர்
ம-ள-ள-ஸ்ரீ சாமிநாத பண்டிதரவர்கள்
...
...
1
திரிசிரபுரம் நாஷனல் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர்
வித்துவான் ஸ்ரீமத் உ.வே. A. M. அப்பு சடகோப
ராமானுஜாசாரியரவர்கள்
...
...
1
காஞ்சீபுரம் ம-ள-ள-ஸ்ரீ ம. தெய்வசிகாமணி முதலியாரவர்கள்
...
...
1

* இஃது ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ அரங்கநாத கவிராயரவர்களால் எழுதப்பெற்றது; இதனை ஸேது சமஸ்தான வித்துவான் ஸ்ரீமத் உ.வே.ரா. இராகவையங்காரவர்கள் வருவித்து உபகரித்தார்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-05-2018 17:09:17(இந்திய நேரம்)