தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU


xxvii

வழிக்கண் நன்னூலார் குறிப்பிட்ட வினைத்தொகை பண்புத்தொகை, அன்மொழித்தொகை என்பனவற்றை விடுத்து ஏனையவற்றையே கொண்டு குறிப்பிடுகின்றமைக்கு உரையாசிரியர்தம் கருத்தை ஒட்டி விளக்கம் தருவதோடு எழுவாயும், விளியும் வேற்றுமையாமேனும் அல்வழிப்பாற்பட்டமைக்கு உரிய காரணங்களையும் சுட்டுகிறார். தொல்காப்பியனார் புணரியலின் எடுத்துக் கோடற்கண் முதல் பதினொரு நூற்பாக்களான் நுவன்ற செய்திகளை இவ்வியலின் முதல் நூற்பா உரையுள் ஏற்றபெற்றி எடுத்துக் கூறுவதோடு, இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ முடிபு, இலக்கணத்தொடு பொருந்தா மரூஉ முடிபு என்பனவற்றையும் விளக்கி, நச்சினார்க்கினியர் உரைத்தாங்குத் தழாஅத் தொடர்களையும் ஈண்டே விளக்கியுள்ளார். பின், ஒரு தொடரில் விகாரம் ஒன்றேயன்றிப் பலவும் வருமாற்றையும் குறிப்பிடுகிறார். நிலைமொழி வருமொழிகள் பெயரும் வினையுமாய் வருதலேயன்றி இடையும் உரியும் ஆகவும் வருமாற்றை ஆட்டாண்டுத் தக்க எடுத்துக்காட்டுக்கள் தந்து விளக்கியுள்ளார். இதனைப் புணரியற் பகுதிகள் பலவற்றுள்ளும்யாண்டும் மறவாது கூறிச்செல்லும் திறன் பாராட்டத்தக்கதாகும். பொதுவாகத் தோன்றல் விகாரம் என்பது ஒற்றோ உயிர்மெய்யோ சாரியையோ மிகுதலாகும் என்பதைத் தொடக்கத்திலேயே விளக்குகிறார். பின், செய்யுள் விகாரங்கள் ஆறனையும் குறைகள் மூன்றனையும் தனித்தனிச் சுட்டி, அவற்றின் வேறுபாடுகளையும் தெரித்துச் சாரியைகளின் தொகுப்பினை நன்னூலார் கூறியாங்குக் குறிப்பிடுகிறார். மரபுநிலை திரியா மாட்சியோடு பழையன கழித்துப் புதியன புகுத்து நூல்செய்தல் ஆசிரியர்தம் கடப்பாடு ஆதலின், நன்னூலார் கருத்தே காலத்துக்கேற்பத்தக்கது என்று ஓர்ந்து, தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளவற்றுச் சாரியையினையும், அக்குச் சாரியையினையும் இக்குச்சாரியையினையும் நன்னூலார் கூறியாங்கு அற்றுச் சாரியையாகவும் அகரச் சாரியை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 20:48:47(இந்திய நேரம்)