தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2. பிரபந்த மரபு

.
பிற்சேர்க்கை - 2.
பிரபந்த மரபியல்
 
நூற் பெயர்
 
‘வானவர் ஏத்தும் மறையோர் முதலிய
மக்களின் னோர்க்குத் தக்க தன்மையின்
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாத்
தொண்ணூற் றாறுஎனும் தொகைய தாம்முற்
பகர்இயல் முன்னுறப் பாடும் பிரபந்த
மரபிய லதுபிர பந்தமர பியலே.’  
 

1

‘செறிகொலை நீக்கித் தெய்வம் காப்புஎனத்
தொகைஅளவு வரையும் இசைவகுப்பு அகவல்
விருத்தம் தன்னால் வினவுமுறை காப்புச்
சாற்றுசெங் கீரை தால்சப் பாணி
வழங்கும் முத்தம் வாரானை அம்புலி
சிறுபறை சிற்றில் சிறுதேர் பத்தும்
ஈற்றில்மூன்று ஒழித்து ஏந்திழை யார்தமக்கு
உறுகழங்கு அம்மானை ஊசல் அமைய
மூன்றுமுதல் இருபத் தொன்றனுள் ஒற்றைப்
பெறுமதி கொளலாம் பிள்ளைக் கவியே.
 

2

பிள்ளைக்கவியின் செய்யுட்டொகை
 
இமையவர் வேதியர் இயல்மனர் வைசியர்
சூத்திரர் என்னச் சொற்றஐ வருக்கும்
முறையே நூறு முதல்அறு பான்வரை
கணிக்கும் பிள்ளைக் கவியின் தொகையே.
 

3



புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 18:21:15(இந்திய நேரம்)