தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட்டியல் - பிற்சேர்க்கை 4

483


10.  இரட்டைமணிமாலை :

முறையானே வெண்பாவும் கலித்துறையும் இருபஃது அந்தாதித்
தொடையான் வருவது. நேரிசை வெண்பாப் பத்தும் ஆசிரிய விருத்தம்
பத்தும் அந்தாதித் தொடையால் பாடுவதும் ஆம்.

11.  இருபா இருபஃது :

பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித் தொடையான் இருபது
இணைந்து வருவது.

12.  உலா :

இளமைப் பருவம் உற்ற தலைமகனைக் குலம், குடிப்பிறப்பு, மங்கலம்,
பரம்பரை இவற்றால் இன்னான் என்பது தோன்றத் தலைமையாய மாதர்
நெருங்கிய வீதியிடத்து அவன் பவனிவரப் பேதை முதலிய ஏழு பருவப்
பெண்களும் தொழ உலா வந்ததாக நேரிசைக் கலிவெண்பாவால் கூறுவது.

13.  உலாமடல் :

கனவில் ஒரு பெண்ணைக்கண்டு கலவி இன்பம் நுகர்ந்தோன்
விழித்தபின் அவள்பொருட்டு மடல் ஊர்வேன் என்பதைக் கலிவெண்பாவால்
முற்றுவிப்பது.

14.  உழத்திப் பாட்டு:

கடவுள் வணக்கம், முறையே மூத்த பள்ளி இளைய பள்ளிகுடும்பன்
வரவோடு அவன் பெருமை கூறல், முறையே அவர் வரலாறு, நாட்டு வளன்,
குயில்கூக் கேட்டல், மழைவேண்டிக் கடவுள் பரவல், மழைக்குறி ஓர்தல்,
ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற்கு இடையிடை
அகப்பொருள் துறையும் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகள்
இருவர் முறையீடு, இளையாளை அவன் உரப்பல், பள்ளன் வெளிப்படல்,
 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:19:54(இந்திய நேரம்)