Primary tabs
தேடியும் கிடைக்கவில்லை இருக்கும் பகுதியும் பயன்படாமற் போமே யென்றஞ்சி இந்த அளவிலேயே இதனை வெளியிட எண்ணிச் சென்ற ஆவணியில் பதிப்பிக்கப் தொடங்கினேன். “தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழ்” (பரிபாடல்) என்று நல்லிசைப் புலவரால் தள்ளத் தகாததாகச் சிறப்பிக்கப் பெறும் அகப் பொருட் பகுதியேனும் தமிழ் நாட்டில் அழியாது இருந்தது குறித்துத் திருவருளைச் சிந்திக்கின்றேன்.
இதனைத் தம் பத்திரிகையில் வெளியிட்ட ‘கலைமகள்’ அதிபர் ம-ள-ள-ஸ்ரீ ரா. நாராயணசாமி ஐயரவர்களுடைய பேரன்பை என்றும் மறவேன்.
இந்நூலை ஆராயும் போதும் பதிப்பிக்கும்போதும் உடனிருந்து உதவி செய்தவர்கள் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயரும் சிரஞ்சீவி வித்துவான் கி. வா. ஜகந்நாதையரும் ஆவர்.
“தியாகராஜ விலாசம்”
திருவேட்டீசுவரன்பேட்டை,
13-3-37
இங்ஙனம்,
வே. சாமிநாதையர்