தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Navaneetha Paattiel-நூலாசிரியர் வரலாறு

இரண்டாம் பதிப்பின் முகவுரை

இவ்வரிய நூலின் இரண்டாம் பதிப்பினை நூல்நிலையம் வெளியிட அனுமதித்த கலாக்ஷேத்திரத்தின் தலைவர்க்கு எம் மனமார்ந்த நன்றி. இது அச்சாகும் போது புரூப் பார்த்து உதவிய அன்பர் ஸ்ரீ T.K.இராமாநுஜதாசர் அவர்களுக்கும், இதனை அச்சிட்டு உதவிய ரத்தினம் (பிராஞ்ச்) அச்சகத்தாருக்கும் எம் கடப்பாடு உரியது.

1-12-61.

நூல் நிலையத்தார்.


நூலாசிரியர் வரலாறு

சிறப்புப் பாயிரத்தால் இந்நூலை இயற்றியவர் நவநீத நடனார் என்பது புலனாகும். நவநீதநடன் என்பது கண்ணபிரானைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று (இந்நூல் 3- ஆம் பக்கத்திலுள்ள குறிப்புரையைக் காண்க.) இவர் வாழ்ந்து வந்தது நவநீதநாடு என்று உரை கூறும். கம்பநாடு, கம்பர் என்ற பெயர்களுக்குள் தொடர்பிருத்தல் போல, நவநீத நாடு நவநீத நடன் என்ற பெயர்களுக்குள்ளும் தொடர்பு காணப்படுகிறது. இந்நாடு இன்ன இடத்திலுள்ளதென்று இப்பொழுது தெரியவில்லை.

இந்நூலின் உரை இவரை அரிபத்தர் (திருமாலின் அடியார்) என்று குறிக்கின்றது. இவருடைய பெயரும், நூலின் தொடக்கத்தில் திருமாலின் விஷயமாக இவர் கூறும் காப்பும் இதனை வலியுறுத்தும். திரிசிரபுரம் மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்களிடம் பயின்ற வித்வான் சுப்பராய செட்டியாரிட மிருந்த நவநீதப் பாட்டியல் ஏட்டுப் பிரதி யொன்றில்,
 


‘கரிமுகத் தண்ணல் கடவுள ரைங்கரக் கணபதியைப்
பரிவுரை மாமலர் சாத்திப் பணிந்துள பாவினத்தை
அரிமத னான நவநீத னென்னு மியான்வகுத்த
உரைசெயி லக்கண நவநீதப் பாட்டிய லுலகினுக்கே’

என்று ஒரு பாட்டு காணப்படுகிறதென்று ஐயரவர்கள் தம் கைப்படக்
குறித்துள்ளார்கள். இச் செய்யுளின் தளை பிழை
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 16:20:49(இந்திய நேரம்)