தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இளவெயினனார்


இளவெயினனார்

263. நெய்தல்
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
5
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
10
உரைத்த-தோழி!-உண்கண் நீரே.
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.-இளவெயினனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:16:42(இந்திய நேரம்)