தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதப்பிள்ளையார்


கதப்பிள்ளையார்

135. நெய்தல்
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
5
இனிது மன்றம்ம தானே-பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:18:54(இந்திய நேரம்)