தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கீரத்தனார்


கீரத்தனார்

42. முல்லை
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
5
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
10
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:20:55(இந்திய நேரம்)