தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார்


குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார்

332. குறிஞ்சி
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்
5
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
10
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:21:37(இந்திய நேரம்)