தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தேய்புரிப் பழங்கயிற்றினார்


தேய்புரிப் பழங்கயிற்றினார்

284. பாலை
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்:
5
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
10
தேய்புரிப் பழங் கயிறு போல,
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.- தேய்புரிப் பழங்கயிற்றினார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:24:31(இந்திய நேரம்)