தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நற்றங் கொற்றனார்


நற்றங் கொற்றனார்

136. குறிஞ்சி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை-வாழிய, பலவே!-பன்னிய
5
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:26:00(இந்திய நேரம்)