தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்


மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்

289. முல்லை
அம்ம வாழி, தோழி!-காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
5
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:31:12(இந்திய நேரம்)