தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தண்ணிய கமழும்


தண்ணிய கமழும்

137. பாலை
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை
5
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை,
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும்
குன்ற வைப்பின் கானம்
10
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே!
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:05:28(இந்திய நேரம்)