தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தோடு அமை


தோடு அமை

282. குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
5
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-நல்லூர்ச் சிறு மேதாவியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:07:22(இந்திய நேரம்)