தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீயும் யானும்


நீயும் யானும்

27. நெய்தல்
நீயும் யானும், நெருநல், பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி,
5
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும்
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,
10
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே.
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:09:54(இந்திய நேரம்)