தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முற்றா மஞ்சட்


முற்றா மஞ்சட்

101. நெய்தல்
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
5
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:20:49(இந்திய நேரம்)