தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


சிச்சிலி (சிரல்)

61. குறிஞ்சி
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
5
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
'படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
10
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே.
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:36:53(இந்திய நேரம்)