தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்


காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

297. குறிஞ்சி
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பொருள்' என,
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே.
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:11:49(இந்திய நேரம்)