Primary tabs
மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
அவைதாம்: புண் உமிழ் குருதி, மரம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.
10
அவைதாம், அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண் கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம்.
ஆராத் திருவின் சேரலாதற்கு
அவைதாம்: கமழ் குரல் துழாய், கழை அமல் கழனி, வரம்பு இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு பறந்தலை, வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின் பதிகம்.
வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
அவைதாம்: சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.
குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்ற மகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து,
வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி,
மன்னரை ஓட்டி,
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: வடு அடு நுண் அயிர், சிறு செங் குவளை, குண்டு
கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து
மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு
தடக் கை, மா கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை
பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ.
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
அவைதாம்: புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி: இவை பாட்டின் பதிகம்.
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை,
பல் வேல் தானை அதிகமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று,
முரசும் குடையும் கலனும் கொண்டு,
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு,
துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம்,
நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று
யாணர், மா சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ
நோக்கு இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள்.
இவை பாட்டின் பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று,'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டில் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச்செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி,
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந் திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறல் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு,
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல்
தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு
வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல்
கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை. இவை
பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ