ஊடலறியா - ஊடலியற்கை தெரியாத
        
        
       
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
        
          எங்காமம் - எமது விருப்பம்
        
        
       
      
        
          எச்சில் - சேடம்; நிருமாலியம்
        
        
       
      
        
          எஞ்ஞான்றும் - எப்பொழுதும்
        
        
       
      
      
      
      
      
        
          எதிர்கொண்டோர் - ஏற்றுக் கொண்டோர்
        
        
       
      
        
          எதிர்விருந்து - தமக்கு விருந்து செய்தார்க்குக்
            கைம்மாறாகச் செய்யும் விருந்து
        
        
       
      
      
      
      
      
      
        
          எரிசினம் - கனல்கின்ற சினம்
        
        
       
      
      
      
      
      
      
      
      
        
          எவ்வயினோயும் - எப்பொருளின்
          அகத்தே உள்ளோயும்
        
        
       
      
        
          " - எவ்விடத்தும் இருந்தோயும்
        
        
       
      
      
      
        
          எழின்மாடம் - அழகிய மாடவீடு
        
        
       
      
      
      
      
        
          எழுதெழிலம்பலம் - சித்திரச் சாலை
        
        
       
      
        
          எழுத்துநிலை மண்டபம் - சித்திரச் சாலை
        
        
       
      
      
        
          எழுமகளிர் - ஏழு முனிவரின்
          மனைவியர்; கார்த்திகை
        
        
       
      
      
      
      
      
      
        
          எற்கன்பன் - எனக்கு அன்பன்
        
        
       
      
      
      
      
        
          என்மாரும் - என்று கூறுவாரும்
        
        
       
      
      
      
        
          என்னாது - என்று நினையாமல்
        
        
       
      
      
      
      
      
      
        
          ஏஎக்கழுத்து - இறுமாந்த கழுத்து