தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மாநிதிக் கிழவன்

மாநிதிக் கிழவன்

 

66. மருதம்
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
5
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
10
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது,
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
15
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக்
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
தானே புகுதந்தோனே; யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
20
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
25
பழங் கணோட்டமும் நலிய,
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே.
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:53:15(இந்திய நேரம்)