தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தானை நிலை

தானை நிலை
276
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்,
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை,
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன்,
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
5
குடப் பால் சில் உறை போல,
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.
திணை அது; துறை தானை நிலை.
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:19:22(இந்திய நேரம்)