தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஓவத்து அன்ன இடனுடை

ஓவத்து அன்ன இடனுடை
251
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும்
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி,
5
கான யானை தந்த விறகின்
கடுந் தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!
திணை வாகை; துறை தாபத வாகை.
....................மாற்பித்தியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:09:01(இந்திய நேரம்)