தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

காமரு பழனக் கண்பின்

காமரு பழனக் கண்பின்
334
காமரு பழனக் கண்பின் அன்ன
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல்,
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு
5
..................... ன் ஊரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே;
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த
பொலம் .............................. ப்
10
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவு வேல் காளையும் கை தூவானே.
திணையும் துறையும் அவை.
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:18:19(இந்திய நேரம்)