தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai


விருந்தோம்பல் குலமுறை பற்றாதது
விருந்தோம்பல் குலமுறை பற்றியது.
கல்வி அனைவர்க்கும் பொது.
கல்வி பிராமணனுக்கே சிறப்பு
குற்றத்தண்டனை நடுநிலை பற்றியது
குற்றத்தண்டனை குலமுறை பற்றியது.
அறம் என்பது எல்லார்க்கும் பொதுவான நல்வினை
தருமம் என்பது வருணாசிரம ஒழுக்க வேறுபாடு
அறம்பெற ஏழைகளெல்லாரும் உரியர்
அறம்பெறப் பிராமணரே யுரியர்.
தமிழே தேவமொழி
வடமொழியே தேவமொழி
கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும்
கோயில் வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டும்
இந்திய நாகரிகம் தமிழரது
இந்திய நாகரிகம் ஆரியரது.
சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம்.
சிவமதமும் திருமால் மதமும் ஆரிய இந்து மதக் கூறுகள்.
தாய் பசிப்பினும் பழிக்கத்தக்க செய்யலாகாது
எது செய்தும் தாயைக் காக்கலாம்.
இரப்பது இகழ்ச்சி
இரப்பது இகழ்ச்சியன்று.
இல்லறத்தாலும் வீடுபெறலாம்
துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம்.
இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு
மாணவம் மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை நிலை நான்கு.
துறவறம் எல்லார்க்கும் பொது.
துறவறம் பிராமணர்க்கே சிறப்பு
துறவுநிலை ஒன்றே 
துறவுநிலைகள் குடீசகம், பகூதகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் என நான்கு.

குடீசகன் புதல்வர் அல்லது உறவினரிடம் உண்டிபெற்று இலைக் குடிலில் வதிபவன். பகூதன் ஏழுவீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஒழுகுபவன். ஹம்ஸன் பலர் வீடுகளில் இரந்துண்பவன். பரம ஹம்ஸன் ஐம்புலன்களையும் அடக்கினவன்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:00:52(இந்திய நேரம்)