தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai

வாணிகன் -- வாணியன். வணிகன் -- வணிகு. வணிகு -- வணிஜ்(வ.), வணிகன் -- வணிஜ(வ.).

விக்குள்: விக்கு--விக்கல்-விக்குள் (ஒலிக்குறிப்புச்சொல்) விக்கல்--ஹிக்கா (வ.) E hiccup. hiccough. இவ்வொலிக்குறிப்புச்சொல் குமரிநாட்டிலேயே தோன்றிவிட்டது.ஆதலால் அதன் திரிபே ஆங்கிலச்சொல்லும் வடசொல்லும்.

வித்து: வித்து==விதை.விதை--வீஜ,பீஜ(வ.)

வியம்:விள்ளுதல்= விரிதல்.விள்--(விய்)--வியம்=விரிவு, வியம்--வியன்--வியல்=அகலம்."வியலென் கிளவி யகலப் பொருட்டே." (தொல்.சொல்.354).

வியம்--வியத்(வ.).

விழி; விழித்தல்=கண்திறத்தல்,பார்த்தல்,அறிதல்.விழி=கண்,பார்வை,அறிவு,ஓதி(ஞானம்.) விழி--L.vide, Gk(w) oida, Skt vid, OE, OS witan, OHG wizzan, ON vita, Goth witan.

வெஃகு: விள் -- விர் -- (விரு) -- விரும்பு. விள் -- வெள் -- வெண்டு. வேண்டு. வெள்-- வேள்-- வேண் = விருப்பம். வேண்டுதல் = விரும்புதல், விரும்பியிரத்தல். வெள் -- வெள்கு -- வெஃகு, வெஃகுதல் = விரும்புதல், பேராசை கொள்ளுதல், பிறர் பொருளை விரும்புதல். வெஃகு -- க. பேக்கு = வேண்டு E.beg. பேக்கு -- பிக்ஷ்(வ.).

வேலை வேல் வேலி = வேலமுட்கிளையால் அமைத்த வளைசல் சுற்றெல்லை, எல்லை. வேல் -- வேலை = எல்லை, காலவெல்லை, பொழுது. வேலை -- வேளை = நேரம், அமையம், பொழுது. வேலை -- வேலா(வ.)

இவற்றின் விளக்கத்தை யெல்லாம் என் வடமெழி வரலாறு என்னும் நூலுட் காண்க.

இன்னும் இவைபோன்ற சொற்கள் பல உள.விரிவஞ்சி அவை இங்குக் கூறப்பட்டில.

6. திருக்குறட் சிறப்புச் சொற்கள்.

அதி(நுட்பம்), அளறு (நரகம்), அறன்கடை, கஃசு, குறியெதிர்ப்பை, கோட்டிகொளல், சோகா, தீயுழி, தோல், நெடுநீர், வரன்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:13:33(இந்திய நேரம்)