தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 2


லும் பகரப்பெற்றுள்ளன. பாலைநிலவழி பலபடியாகக் கூறப்பெற்று, பாலைக்கு நிலமின்மை தோன்ற முல்லைக்கட்பாலையும் மொழியப்பட்டுளது.

மருதத்தின்கண் தலைமகன் புதல்வன்முகங் காண்டல், புதல்வற்குப் பெயரிடுதல், பரத்தையர் தலைமகனை மாலையாற் பிணித்துக் கொண்டு போதல், எருமையின் கழுத்தில் தொண்டுக் கட்டையிடல், உறுதி மொழிகளை எழுதுவித்துக் கொள்ளல், பாணற்குத் தலைமகள் வாயின்மறுக்கும் வகை, தோழி தலைமகனை வணங்கிய மொழியான் இணங்குவிக்கும் வாய்மை, தோழி தலைமகள் மாட்டுக் கொண்டுள்ள பேரன்பு முதலியன பெரிதும் நெஞ்சினைப்பற்றியிழுக்கும் நேர்மையனவாயுள்ளன. நாற்பத்தேழாவது செய்யுட் கண் காதலுனுங் காதலியும் மாறின்றி வாழுங் காட்சியைக் கண்டு செவிலி நற்றாயிடங் கூறுங் கூற்று, பிற்காலத்தே எள்ளப்படும் சில செய்திகளும் அக்காலத்தே பெரியோர் பலராற் போற்றப்பட்டன எனப் புலனாக்குகின்றது. ஐம்பத்திரண்டாவது செய்யுட்கண் நிகழுந் தலைவிகூற்றானது தொல்காப்பியர் கண்ட பல அரிய துறைகளில் சில இந்நூலிற் காணப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

நெய்தற்கண் தலைமகள் தலைமகனை இயற்பட மொழியும் எழிலும், அல்லகுறிபட்ட வழகும், தோழி அன்றிலோடு கூறியாறும் அமைதியும், குருகினைச் சான்றாகக் கொள்ளுமாறும், அவ்வவ்விடங்கட்கேற்ற இறைச்சிப் பொருளும் பொலிந்துள்ளன.

இந்நூலினை இயற்றிய மூவாதியர் என்ற பெரியாரைப்பற்றிய செய்தி யொன்றும் அறியுமாறில்லை. பெயர் கொண்டு இவர் சமணசமயி என ஐயுறற்கிடமுண்டாகின்றது. இந்நூலின் முதலிருபத்து நான்கு செய்யுட்கட்குமட்டும் பழைய பொழிப்புரையொன்று காணப்படுகின்றது. அதனைச் செய்தார் செய்தியும் தெரிந்திலது. இருபத்து நான்காவது செய்யுளின் பழையவுரையின் பிற்பகுதி ஏடுகளின் சிதைவாற் காணப்பெறாது புதிதாகச் சேர்க்கப்பட்டது. இருபத்தைந்தாவது செய்யுண்முதல் முப்பத்தாறு செய்யுட்கட்குப் புதிதாகப் பதவுரை மட்டும் எழுதிச் சேர்க்கப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:02:35(இந்திய நேரம்)