Primary tabs
என்ற பாடலின் (7) ஈற்றடியை ஒப்ப, 'குடத்து விளக்கேபோல்' என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப்பாடலின் ஈற்றடியும், 'நாடு அறி கௌவை தரும்' என்று உள்ளது. நச்சினார்க்கினியர் முதலியோர் இந் நூற்பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
இந் நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உள்ளது. வேறு சில உரைகளிற்போலப் பதசாரம், உள்ளுறைப் பொருள், இலக்கண விளக்கங்கள் என்னும் இன்னோரன்னவற்றை எடுத்துக் காட்டாவிடினும், பாடலின்பொருளைத் தெளிவாக இவ் உரை உணர்த்துகின்றது. பாடல்களுக்குப் பழைய துறைக் குறிப்புகளும் அமைந்துள்ளன.