Primary tabs
குன்னூர் மலைகளிடையே மாலை உலாவிய
 சில நண்பர்களிடையே
 கம்ப ராமாயண உரைப்
 பதிப்பைப் பற்றிப் பேச்சு எழுந்தது. 1992
 ஏப்ரல்
 மாதத்தில்   தொடங்கிய   அந்தப்   
 பேச்சின் செயல் வடிவு, பாரதப்
 பொன்னாட்டின்
 சுதந்திரப்      பொன்விழா ஆண்டில் (1997) ஒருவாறு
 நிறைவுறுகிறது.   பதிப்பு முயற்சிக்கான
 தொடக்கம், தொடர்ச்சி பற்றிய
 விவரங்களை
 முன்னைய தொகுதிகளில் காணலாம்.
	
 
செந்தமிழ்   அருட்செம்மல்,  
 டாக்டர்
 பி.எஸ்.ஜி.ஜி. கோவிந்தசாமி
 இப்பணியைத்   தொடர   முடியாத  
 நிலை   உருவாகித் ‘திட்டமும்
 நடைபெறாதோ’    என்ற கவலை   எழுந்தபோது, ஸ்ரீ
 இராமபிரானின்
 திருவருள்    தூண்டுதலால்  கம்பன்
 அறநெறிச் செம்மல் திரு. ஜி.கே. 
 சுந்தரம்   முழுப்    பொறுப்பினையும் ஏற்றுத் தம் கம்பன் டிரஸ்டின் 
 பணியாக இவ் விளக்கவுரை வெளியீட்டைத்
 தொடங்கித் தொடர்ந்தார்.
	
 
உரையாசிரியர்கள்  
 அரிதின்முயன்று  நிறைவேற்றிக்  கொடுத்த 
 உரையின்
 கையெழுத்துப் படிகளை முதலில் இணைப்
 பதிப்பாசிரியர்
 டாக்டர் ம.ரா.போ. குருசாமி
 கவனமாகப் பார்த்து முடித்து,  எனக்கு
 அனுப்பி   வந்தார்.   கட்புலன் ஒத்துழைக்காத நிலையில்
 பதிப்புப் 
 பணியை  என்பால்  திருவருள் சுமத்தியது; வரி வரியாகப் படிக்கக் 
 கேட்டு,  வேண்டும் திருத்தங்கள் மாற்றங்கள் செய்து,
 அச்சகத்திற்கு
 அனுப்புவது  என்  பணி   ஆயிற்று.
 இந்த அரும்பணியில் எனக்கு
 உறுதுணையாக  மகாவித்துவான்  வே. சிவசுப்பிரமணியன்
 இருந்தார்.
 தொடர்ந்து என் மகள் ஞா.
 மீராவின் உதவி கைகொடுத்தது.
	
 
குருதேவர் தெ.பொ.மீ, தம் மறைவின்
 பின்னரும் என் பணிகளை
 இயக்கி   நெறிப்படுத்துகிறார்   என்பது  
 என்   அனுபவம்,
 அவர்
 குறிப்பித்தருளியபடியே  -  தாமதமாக,  தடைகளை அவ்வப் போது 
 தவிர்த்து - இன்று ஒரு
 நிறைவு நிலையை இத் தெய்வத்