Primary tabs
குணக்கடல்: - குணங்களுக்குக் கடல் போன்றவன்; (அனந்த ஞானாதி) குணங்கள் நிறையப் பெற்றவன்; வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, ‘அலகையில்லாக் குணக்கடலே.’ ‘குணக்கடல்’ ‘இன்பநிறை கடல்‘1 என்று திருத்தக்க தேவரும், ‘பகரலாக் குணக்கடலே‘2 என்று உதீசிதேவரும் கூறியுள்ளதை அறிக. வெவ்வினை(யின்) விலகி என இயைக்க. வெவ்வினை; ஈண்டுக் காதிவினை. வீடு-கைவல்யநிலை; மோஷம். வீடு
பெறுவதற்காகவே கடவுளை வணங்குவது. இதனை,
என்று கூறியதனா லறிக.
மலர், ஈண்டுத் தாமரையையுணர்த்தும்; ‘பூவெனப்படுவது பொறிவாழ்பூவே‘ என்றது காண்க. சேவடி - செம்மை அடி; திருந்திய திருவடி யெனினுமாம். ‘ வெவ்வினை விலகி மாமலர் இலகும் சேவடி‘ என இயைத்து,
வெவ்வினை விலகியவுடன் தேவ ரியற்றிய பொற்றாமரையின்மேல் விளங்கி ஏகும் சிறந்தபாதம் எனினும் அமையும். ‘மலர்மிசை யேகினான்‘ (குறள். 3), ‘மலர்மிசைநடந்த மலரடி’ (சிலப்.நாடுகண். 204), எனப்பலவிடத்தும் வருவன அறிக. வெவ்வினை - பண்புத் தொகை; வெவ்வினைவிலகி - ஐந்தாம் வேற்றுமைத் தொகை. (1)