தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 12 -

சென்று, மாமுகில் சூடுவது-சிறந்தமேகம் தன்மேல் தவழ விளங்குவதும், இம்பர் ஈடுஇலது-இம்மண்ணுலகத்து வேறு நாடு தனக்கு ஒப்பில்லாததுமான, ஒளதயம் என்பது - ஒளதேயம் என்று சொல்லப்படுவது. உளது-ஒன்றுஉண்டு.(எ - று.)

ஒளதேயம் என்ற நாடு, இந்நிலவுலகத்தே ஒப்பற்று விளங்கிற்று என்க.

பைம்பொன் - பொன்மயமான மேருகிரி; ஆகுபெயர் பைம்பொன் நாவல்பொழில்- பசும்பொன் உண்டாகும் நாவலந்தீவு எனலுமாம். நாவற்பொழில்; நாவலந்தீவு; ஜம்பூத்விபம் என்றும் வழங்கும். மேருமலை நாவலந் தீவின் மத்தியிலுள்ளது என்பதனை, ‘மந்தர நடுவதாக ... நாவலந் தீவினுள்ளால்’ (மேரு. 224.) என்றதனால் அறிக. ‘மாயோன் மேய காடுறை யுலகமும்’ என்ற விடத்து உலகம் என்பது பூமியின் ஒருபகுதியை யுணர்த்தினாற்போல, முதலில் வந்துள்ள (பூமியென்னும் பொருளுள்ள) பொழில் என்பது. உலகின் ஒரு பகுதியாகிய தீவு என்னும் பொருளை யுணர்த்திற்று பரதகண்டம் மேரு மலையின் தெற்கில் உள்ளது; இதனை, ‘மேரோர்தக்ஷிண திக்பாகே நாம்நா க்ஷேத்ரஞ்ச பாரதம், தத்ர யௌதேயதேக்ஷேஸ்தி தரித்ரீ மண்டனக்ஷம; (பூர்ண.யசோ.) என்று கூறுவதனால் அறிக. நம்புதல் - வி்ரும்புதல். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தொல்காப்பியம். ஊடு-உள்ளே. வம்பு - புதுமையுமாம். வார்பொழில் - மேகமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்த சோலை. (1)

நகரச் சிறப்பு

6.
திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்1
 
வசை யிலாநகர் வானவர் போகமஃ
 
தசைவி லாவள காபுரி தானலால்
 
இசைவி லாதவி ராசபு ரம்மதே.2

 


1 வுண்ணிலாய்.

2 புரமதே.

 



புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 12:42:16(இந்திய நேரம்)