Primary tabs
வேனில் வரவு
(இ-ள்.) நெரிந்த நுண் குழல் நேரிழையாருழை-மடிந்துசுருண்டுள்ள நுண்ணிய கூந்தலையும் நேர்மையுள்ள (அழகிய) அணிகலன்களையுமுடைய மகளிர்பால் சரிந்த காதல்-அடைந்த காதல், தடையிலாதாக - இடையூறின்றி ஒழுக வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகும் நாள்-வரிந்துகட்டிய வெவ்விய வில்லையுடைய வேந்தனான மாரிதத்தன்(இன்பத்தில்) தங்கியிருந்த நாளில், இன் இளவேனிற் பருவம் விரிந்தது - இன்பந்தரும் இளவேனிற்பருவம் வந்து பரவியது. (எ-று,)
மன்னவன் நேரிழையாருழை காதல் தடையிலாதாகவைகும் நாளில், இளவேனில் வந்தது என்க.
காதலெல்லாம் நேரிழையாருழையே சேர்ந்திருத்தலை ‘சரிந்த’ என்றார். வைகுதல்-தங்குதல்;கழிதலுமாம். “வைகனாளும் வைகின்றே” (சீவக.156.) என்பது காண்க. (3)
வசந்தமன்னனை வரவேற்றல்
(இ-ள்.) கோங்கு-கோங்குமரங்கள், (அவ் வயந்தமன்னனுக்குத் தம் மலர்களாகிய), பொற்குடைகொண்டு-பொன்குடையைக் கொண்டு, கவித்தன; வாகை - வாகை
1 சாய்மறை.