தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 34 -

அசை; ‘அனங்கமாவிணை*’ என்றார்போல, துளங்கல்-சலனமுறல்.  மெய்-உடல். பொய்யானவுடலை ‘மெய்‘ என்று கூறியது  மங்கலவழக்கு.  (21)

சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச்

சரியை செல்லப் பணித்தல்

26.
அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி
 
வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்
 
எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி
 
நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது1 சென்றார்.

(இ-ள்.) அமுனி-அந்தச் சுதத்தாசாரியர், அவர்கள் தம்மை -(வணங்கிய)அவ்விருவரையும், அருளியமனத்தனாகி - அருள்புரிந்த உள்ளத்தராய், ‘ வம்மின் - வருக; நீர் பசியின் வாடிவருந்திய மெய்யரானீர் - நீவிர் பசியினால்வாடிவருந்திய உடலையுடையவரானீர்; (ஆதலின்), இன்று -இந்நாளில், எம்முடன் உண்டி மாற்றாது - எம்மோடுகூடி அனசனதவத்தை மேற்கொள்ளாது, நீர் சரியைபோகி - நீவிர் சரியை சென்று, (விதிப்படி உணவி உண்டு), நம்மிடைவருக-நம்பால் வருவீராக’, என்ன-என்று ஆணையிட, நற்றவன் தொழுது சென்றார்-(அவ்விருவரும்) நற்றவராகிய சுதத்தாசார்யரை வணங்கிச் சென்றனர்.

இளைஞரின் மேனிவாட்டத்தைக் கண்ட ஆசிரியர் சரியை செல்ல ஆணைஇட, இளைஞரிருவரும் குருவை வணங்கிச் சென்றன ரென்க.

உண்டிமாற்றுதல் - உண்ணாவிரதம் மேற்கொள்ளல். சரியை-அருந்தவர், உபாசகர் முதலியோர் இறைவனருளிய திருவறமுறைப்படி உத்தம  சிராவகரிடம் உணவேற்கச் செல்லுதல். சிராவகர் - இல்லறத்தார்.  இவண் கூறிய இளைஞர் இல்லறத்தாராயினும், ‘மனைதுறந்து மாதவர் தாளடைந்து நோற்று, வினையறுப்பா னுத்திட்டனாம்

 

*

சீவக. 1580,
1
நற்றவாத் தொழுது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:49:49(இந்திய நேரம்)