Primary tabs
குணங்களையும் செயல்களையும் அனுசரித்தும், ஆறுமுதல் பன்னிரண்டுவரை முனிவர்களின் குணங்களையும் செயல் களையும் அனுசரித்தும், பதின்மூன்றும் பதினான்கும் (கைவலய்நிலையைக் குணத்தால் எய்திய) இறைவனின் குணங்களையும் செயல்களையும் அனுசரித்தும் கூறப்பட்டனவாகும். இல்லறத்தார்களுக்குக் கூறிய ஐந்துகுணஸ்தானங்களுள்ளும் முதல் மூன்றுகுணஸ்தானங்களி லுள்ளவர்களுக்கு நற்காட்சி பெறும் சக்தியில்லை யாதலின், அவர்கள் சிறப்பினராகக் கூறப்படமாட்டார். நான்காவது குணஸ்தானத்திலுள்ளார் அசம்யத சம்யக்திருஷ்டியர் எனப்படுவர்.* இவர் நற்காட்சிமட்டும் அமைந்தவராகி, விரதங்களை ஏற்று அனுஷ்டிக்காதவராவர். ஐந்தாவது குணஸ்தானத்தி லுள்ளவர்களாகிய தேசசம்யதரென்பார் நற்காட்சியிற் சிறந்து விளங்கி அணுவிரதம்ஐந்து, குணவிரதம் மூன்று, சிக்ஷாவிரதம் நான்கு ஆகியபன்னிரண்டு விரதங்களையும் ஏற்று நிகழ்வதோடு, தியானம் (சாமாயிகம்) செய்தல், தோஷமுள்ள பச்சைவஸ்த்துக்களை உண்ணாது நீக்குதல், (பிரமசர்ய விரதத்தை ஏற்று அனுஷ்டித்தல்) முதலிய பல நற்குணங்களையும் உடைய ராதலின், அவர்களின் மனநிலையையும் செயலையும் அனுசரித்து அவர்களைப் பதினொரு வகையினராகப் பிரித்துக்
இவர்கள் முக்திக்குக் காரணமான நற்காட்சியை அடைந்து இப்பெயர் பெற்றனராதலின், இயல்பினானில் வாழ்க்கை வாழ்பவனென்பான் முயல்வாரு ளெல்லாந்தலை‘ என்று தேவர் கூறியது இவர்களைக் குறிக்கும் என்ப. யசோ.236
1.
தரிசனீகன்.