Primary tabs
யோசனை நீளமுள்ள புலால் நாறும் யாக்கை யுடைய மீன்பிறவியிலும், புக்கு வீழ்ந்து-புகுந்து தோன்ற, நங்களை வந்து கூடி நடந்தன-நம்மை வந்து கூடியிருந்து அழிந்தவுடம்புகள், அனந்தம் அன்றோ-எண்ணற்ற வல்லவோ.
விலங்கு கதியில் அணுவளவுள்ள மிகச் சிறிய உடம்பு முதற்கொண்டு, ஆயிரம்யோசனையளவுள்ள பெரிய மீன் வரையிலுமுள்ள பல பிறவிகளிலும் நாம் பிறந்து அழிந்தவுடம்புகள் அனந்த மல்லவோ என்றா னென்க.
அயங்கம்-அஸங்க்யாதம் என்பதன் திரிபு. அங்குலியயங்கம் பாகம்-அங்குலத்தினை அசங்க்யாதபாகம் செய்ததனாலுண்டானது. அசங்க்யாதம்-ஸங்க்யை யில்லாதது; எண்ணற்றது. இச்சொல் இங்ஙனம் வழங்குதலை‘ அங்குலியயங்கம் பாகம்‘ எனவும், ‘அயங்கியங் கடலுந்தீவும்‘ எனவும் (மேரு. 101, 6.)வாமனமுனிவர் கூறுவதனாலு மறிக. அணு முறை பெருகி - அணுவளவினின்றும் முறையே பெருகி. பெருகுதல்-ஒரு பொறிமுதல் ஐம்பொறி வரைபெருகுதல். ஈரைஞ்ஞூறு - இரண்டு ஐந்நூறு; ஆயிரம். புகை-யோசனை.
கடல் எல்லாவற்றிற்கும் கடைசியிலுள்ளது சுயம்புரமணக்கடல் என்றும், அதிலுள்ள மீன் ஆயிரம் யோசனை நீளமுள்ள தென்றும், பதார்த்த சாரம், லோகசூடாமணி, திரிலோக ப்ரஜ்ஞப்தி முதலிய நூல்களும், மேரு. 78,இன். உரையும் கூறுகின்றன. (34)
என வருஞ் சூடாமணி (3; 71) நிகண்டாலும்,
“தேசமு நூலுஞ் சொல்லுந் திமிங்கில கிலங்களோடு மாசையை யுற்ற வேலை கலங்க” என்னும்(கம்ப, சுந்தரகடறாவு 37) செய்யுளாலும், மற்றும் பிங்கலநிகண்டு முதலியவற்றானும் சிறிதும் பெரிதுமாகிய பலவகை உண்டென்பதை அறியலாகும்.